Bala Murugan has given a very rational explanation in Spirituality...listen and understand...

May 3, 2021
14 mins

Episode Description

தேடலின் முதற்படி;:
பொதுவாக மனித மனம் எப்போதும் நிம்மதியையும் சந்தோசத்தை யும் தேடுகிறது .அந்த தேடலின் இறுதி முடிவாக இறைவனை உணர்ந்தாலோ அல்லது இறைதன்மையை அடைந்தாலோ
.நிந்திய மான ஆனந்தமோ அல்லது பேரமைதி நிலையோ கிட்டும் என புரிந்து அல்லது நம்பிக்கை கொண்டு .
.உண்மையில் இறைவன் யார்? .அல்லது எங்கிருகிறார்? போன்ற தேடலை தொடங்கும் போதே ஆன்மாவை நோக்கிய தேடல் தொடங்குகிறது...
கிடைத்தபொக்கிஷம்
நாம் ஏதோ ஓரு காரணத்தால் இப்போது வாழும் வாழ்க்கை யில ஏதோ ஓரு குறை உணர்வு இருப்பதாலயே நிறைவை நோக்கி தேட தொடங்குகிறோம்.
அதற்கு முன் நமக்கு கொடுக்கபட்ட அருமையான பொக்கிஷம் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்..இந்த புரிதலே மிக அவசியமான ஓன்றாகும்.அது இந்த மனித பிறவி கிடைத்தது மட்டும் அல்ல ..அதிலும் நல்ல உடல் நலத்தோடு .அழகான உடல் அமைப்பும் பெற்று. உள்ளோம். எந்த வித மன கோளாறுகளோ அல்லது பெரும் வியாதிகளோ இல்லாமல் பிறந்து உள்ளோம். அது மட்டுமல்ல நல்ல சமூகசிந்தனை உள்ள குடும்பத்தில் .தேவையான பொருளாதார வசதி உடன் .நல்ல பெற்றோர் களிற்கு
பிறந்து உள்ளோம் .இப்படி ஓரு பிறவி கிடைத்த தற்கு என்னுடைய முயற்சி தான் காரணம் யாரேனும் கூற முடியுமா .இதுவே கடவுள் நமக்கு அளித்த பொக்கிஷம் ....இதை உணர்தலே ஆன்மீக தேடலின் முதற்படி.ஆகும்.
See all episodes